“அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்”- பிரேமலதா

 
பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ல் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

premalatha vijayakanth

கும்பகோணம் அருகே சிவபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிலையையும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அனைத்து மொழியும் கற்போம், அன்னைமொழி காப்போம். அனைத்து மொழியையும் காக்க வேண்டும் இதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கை, அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. அதனை தஞ்சாவூர் மாவட்டத்தில் தெரிவிப்பது சரியாக இருக்கும்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேமுதிக கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொது குழு கூட்டம் நடைபெறும். அதற்குப்பின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அதில் எந்தெந்த தொகுதி தமக்கு கிடைக்கிறது என்பதும் அதுக்கு தகுந்தார் போல் பின்னர் முடிவெடுக்கப்படும். எதுவாக இருந்தாலும் தேமுதிக இடம் பெறும் கூட்டணி  234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார்.