"தேசிய கீதத்தை இரண்டு முறை பாடுவதில் என்ன தவறு?"- பிரேமலதா விஜயகாந்த்
தேசிய கீதத்தை இரண்டு முறை பாடுவதில் என்ன தவறு? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடனும் மீண்டும் உரையெல்லாம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை பாடனும்னு தானே கேட்டாரு... அதில் என்ன தவறு? ஆளுநர் கேட்டதற்காக இரண்டு முறை பாடினால் என்ன குறைந்துவிடும்? ஏன் தேசிய கீதத்தை இரண்டு முறை பாடக்கூடாதா? ஆளுநர் கேட்டதை செய்யவில்லை ஆகவே சட்டமன்றத்தைவிட்டு சென்றுவிட்டார். சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கேட்பது தவறா..? அதில் எந்த தவறும் இல்லை என்பது எங்கள் கருத்து. இன்றும் ஸ்டாலின் அடக்கி ஆளவேண்டுமென நினைக்கிறார். Boomerang மாதிரி 2026 திருப்பி அடிக்கும். மக்கள் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.
தமிழக அரசு என்ன மினி எமர்ஜென்சிய கொண்டு வந்திருக்கிங்களா..? உங்க ஆட்சியில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடுது..? ஏன் யாரும் போராடவே கூடாதா..? பயமா..? ஞானசேகரன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் ஏமாற்று வேலையை நம்ப தயாராக இல்லை. பக்கத்துல இருக்கிற பாண்டிச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 750 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கொடுக்கவில்லை” என்றார்.