அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதில் எந்த தவறு இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

 
நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதில் எந்த தவறு இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு சொல்ல வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் வெளிநாட்டு பயணம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதாகவும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். வெளிநாட்டு பயண விவகாரத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்திற்கு வந்த திட்டங்கள் என்ன?.. எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்? என மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதும் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறில்லை. மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. அன்னபூர்ணா உரிமையாளரின் பேச்சு எதார்த்தமாக உள்ளது.ஆனால் அதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூதாகரமாக மாற்றியுள்ளன. மது ஒழிப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவது வரவேற்கதக்கது” எனக் கூறினார்.