பத்மபூஷன் விருதுடன் கேப்டன் கோயிலுக்கு செல்லவுள்ள பிரேமலதா

 
premalatha vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நாளை பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

Premalatha

அதனை பெறுவதற்காக டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டனுக்கு நாளை டெல்லியில் பத்ம பூஷன் விருது தர உள்ளதால் நாங்கள் இன்று டெல்லி செல்கிறோம். நாளை மாலை 6.30 மணிக்கு மேல் விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் 10ஆம் தேதி மாலை டெல்லி தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. 11ஆம் தேதி சென்னை திரும்பும் நாங்கள், நேரடியாக கேப்டன் கோயில் வரை சென்று கேப்டனுக்கு விருதுகளை சமர்பிக்க உள்ளோம். 

தாங்கள் பயிரிடும் நெற்பயிர்கள் பலத்த காற்றால் சேதம் அடைவதாலும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுவதாலும் விவசாயிகள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உதவித் தொகையை வழங்கவேண்டும்” என்றார்.