அறுந்து விழுந்த தேமுதிக கொடி; தடைக்குப் பிறகுதான் வெற்றி அமையும்- பிரேமலதா விஜயகாந்த்

 
அறுந்து விழுந்த தேமுதிக கொடி; தடைக்குப் பிறகுதான் வெற்றி அமையும்- பிரேமலதா விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக கொடியேற்றும்போது கொடி அறுந்து விழுந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். 

தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றிய கொடி அறுந்து விழுந்தது. இதையடுத்து தடைகளை தாண்டிவிட்டதாக அவர் கூறினார்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை விரைவில் தொடங்கு வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. தினமும் விஜயகாந்த்-ன் நினைவிடத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் வரலாம் வரும் அப்படி வருவோருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் தொடர்ந்து நாங்கள் செய்வோம். விஜயகாந்திற்கு பொது இடத்தில் மணிமண்டம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விஜயகாந்த்-ன் மறைவிற்குப் பிறகு கட்சி கொடியை முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இன்று ஏற்றியுள்ளோம். தேமுதிக கட்சி கொடி ஏற்றும் போது கயிறு அரை கம்பத்தில் அருந்து விழுந்த சம்பவத்தை தடைக்கு பின்னால் அமையும் வெற்றியாக பார்க்க வேண்டும். 

தடைக்குப் பிறகுதான் வெற்றி அமையும். அதற்கு இந்த கொடி அறுந்து விழுந்தது ஒரு எடுத்துக்காட்டு. இதுவரைக்கும் இருந்த எங்களுடைய தடைகள் முழுவதையும் உடைத்து எறிந்து, விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாரோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம். விஜயகாந்த்-ன் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.