#JUST IN :தவெகவினரும் ஆபாசமாக பேசுகிறார்கள் - பிரேமலதா விஜயகாந்த்..!

 
1

பெண்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என CM விஜய் கூறிய கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்த கொள்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண் தலைவர்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசுவதில் தவெக உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய நபர்களை தவெக தலைமை உடனடியாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவெகவைச் சேர்ந்த சிலர் இணையதளங்களில் பெண்களைப் பற்றி மிகக் கொச்சையாகப் பதிவிட்டு வருகிறார்கள். இது நாகரிக அரசியல் களத்திற்கு முற்றிலும் எதிரானது. பெண்களின் கண்ணியத்தைக் சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்தின் இந்தத் திடீர் கோரிக்கையும் கண்டனமும், அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதள மோதல்கள் குறித்த விவாதங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

. அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “சமூக வலைத்தளங்களில் திமுக தான் Fake ID-களை உருவாக்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. என் பெயரிலேயே நான்கு Fake ID-கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

null