கேப்டன் சமாதியில் தியானம் செய்யும் பிரேமலதா விஜயகாந்த்

 
tt

விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி பிரேமலதா விஜயகாந்த் , கேப்டன் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ttttt

விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் , காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவை வருகிறது . அடுத்தடுத்து சுற்று முடிவுகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். 

premalatha vijayakanth

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக -  காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவை வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அமர்ந்து அவரது மனைவியும்,  கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்று அவர் பிராத்தித்து வருகிறார்.