நடிகர் ரஜினிகாந்த் இன்னும் பல ஆண்டுகள் கலைத்துறைக்கு சேவை செய்ய வேண்டும் - பிரேமலதா வாழ்த்து
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் ரசிகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கேப்டன் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சினிமா துறையில் பல ஆண்டுகளாக நண்பர்களாகப் பயணித்தவர்கள். அது மட்டும் இல்லாது, நல்ல குடும்ப நண்பராகவும் இருந்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும், இன்னும் பல ஆண்டுகள் கலைத்துறைக்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன், எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


