தேமுதிக கொடிகளை நாளை முதல் முழு கம்பத்தில் பறக்க விட வேண்டும் - பிரேமலதா அறிவுறுத்தல்
Jan 27, 2024, 17:46 IST1706357783280
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகளை நாளை முதல் (ஜன.28) முழு கம்பத்தில் பறக்கவிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.