குத்து வாங்கிய கத்தியோடு வந்த கர்ப்பிணி... ரத்த வெள்ளத்தில் அண்ணன்...

 
ச் ச்

வேலூரில் அண்டை வீட்டார் அருகே நடந்த சண்டையை விலக்கி விடச் சென்ற கர்ப்பிணிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட சூரிய குளம் பகுதியில் உள்ள ஆர்.எஸ். நகரில் வசித்து வரும் சக்திவேல் அவரது தங்கை கிருத்திகா. இந்த நிலையில் சக்திவேல் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ் என்பவரின் தங்கையை அவ்வப்போது கிண்டல் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக  ஆறு மாதத்துக்கு முன்பே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில், நேற்று இரவு சக்திவேல்  சதீஷ் இடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது  வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில்  திடீரென ஆத்திரமடைந்த சதீஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சக்திவேலை தாக்கியுள்ளார். அப்போது சக்திவேலின் தங்கை 9 மாதம் கர்ப்பிணி கிருத்திகா குறுக்கே வந்துள்ளார். அப்போது கிருத்திகாவின் வலது கையில் கத்தி குத்தி உள்ளது

படுகாயத்தில் கதறி துடித்த கிருத்திகாவை கத்தியுடன் வேலூரில் உள்ள பழைய  பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ப்பிணியை கத்தியால் தாக்கிய சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.