மெக்காவில் மொட்டை அடித்து முதல்வர் விஜய்க்காக பிரார்த்தனை..! – தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் நெகிழ்ச்சி செயல்!

 
1

தவெக சார்பில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் முஸ்தபா, புனித மெக்காவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதியுடன் இருக்க வேண்டி மெக்காவில் உள்ள இறை இல்லத்தில் மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

இதுகுறித்து மெக்காவில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியாவில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்.

மேலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டும்.

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைத்து, மக்கள் நலனுக்காக பல சாதனைகளை படைக்க ஏக இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதேபோன்று உலகம் முழுவதும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும்" என்றும் முஸ்தபா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.