"பொறுப்புடன் பேசுவது அவசியம்"- ஸ்டாலினுக்கு பிரவீன் சக்கரவர்த்தி அட்வைஸ்

 
பிரவீன்

முன்னாள் முதலமைச்சர் மேற்கோள் காட்டிய அதே நாளிதழில்தான், 'தனியார் நிறுவனத்திடம் கேரள அரசு குறைந்த விலையில் மின்சாரம் வாங்கவில்லை' என இன்று செய்தி வெளியாகியுள்ளது. மின் கொள்முதல், அரசுக் கடன் போன்ற முக்கிய விவகாரங்களில், மூத்த தலைவர்கள் பொறுப்புடன் பேசுவது அவசியம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பதிவை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார். 

த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு செய்தித்தாள் செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி, "மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மேற்கோள் காட்டிய அதே நாளிதழ்தான், 'தனியார் நிறுவனத்திடம் கேரள அரசு குறைந்த விலையில் மின்சாரம் வாங்கவில்லை' என இன்று செய்தி வெளியாகியுள்ளது! மின் கொள்முதல், அரசுக் கடன் போன்ற முக்கிய விவகாரங்களில், மூத்த தலைவர்கள் பொறுப்புடன் பேசுவது அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.