விஜய்க்கு என்னுடைய உதவி தேவையில்லை - பிரஷாந்த் கிஷோர் பேச்சு

நான் இங்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வரவில்லை. தவெக தலைவர் விஜய்யின் நண்பராக வந்துள்ளேன் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது. 2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், நான் இங்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வரவில்லை. தவெக தலைவர் விஜய்யின் நண்பராக வந்துள்ளேன். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார் அதற்காக வந்துள்ளேன். விஜய்க்கு என்னுடைய உதவி தேவையில்லை. விஜய் தலைவர் மட்டும் இல்லை, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை. மாற்றத்தின் பிரதிநிதி. தமிழக வெற்றிக் கழகத்திற்கு Strategy செய்ய நான் வரவில்லை. விஜய்க்கு என்னுடைய உதவி தேவை இல்லை என கூறினார்.