2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் - பிரஷாந்த் கிஷோர் தகவல்
Mar 1, 2025, 13:16 IST1740815204830

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தான் போட்டியிடும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும். தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கூட்டணி இல்லை.
2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண விஜய் வியூகம் வகுத்து வருகிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும். அக்கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியை அமைப்பார் என கூறினார்.