சீமான் மீது வழக்குப்பதிவு செய்த முதல்வருக்கு நன்றி- பிரசாந்த் கிஷோர்

 
prashant kishor

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu Migrant Workers Issue: Prashant Kishor Asks Why No Action  Against NTK's Seeman For His Remarks Against North Indians


வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொடர்ந்து தாக்கப்படுவதாக வதந்தி பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது . முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அது உண்மை இல்லை வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கும் என்று உறுதி கூறி இருக்கிறார். இதை அடுத்து வடமாநிலத்தவர்களை தாக்குவோர் கைது செய்யப்பட்டுவருகின்றனர். மேலும் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்பிவருவோரும் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

இந்த சூழலில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டப்படுகிறது . போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டுபவர்களையும் விட்டுவிடக்கூடாது.சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியிருந்தார். 
இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரசாந்த் கிஷோர், “விரைவான நடவடிக்கைக்கு
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.