பீகார் தேர்தல் - 51 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்..!
பீகார் தேர்தலுக்கான 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட இந்த பட்டியலில் கணிதவியலாளர், மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்களில் 16% முஸ்லிம்கள் மற்றும் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேட்பாளர்களில், பாடப் புத்தகங்கள் தயாரிக்கும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கணிதவியலாளர் கே.சி. சின்ஹா (குமஹ்ரார் தொகுதி) மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒய்.பி. கிரி (மஞ்ஜி தொகுதி) ஆகியோர் அடங்குவர்.
முசாபர்பூர் தொகுதியில், கிராமப்புற சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றிய மருத்துவர் அமித் குமார் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சொந்தத் தொகுதியான கார்கஹரில் ரித்தேஷ் ரஞ்சன் என்பவர் ஜன் சுராஜ் போட்டியிட உள்ளார்.
எனவே லாலு பிரசாத் உடைய ஆர்ஜேடி கட்சியின் கோட்டையான ராகோபூரில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


