அரசியல்ல அப்படியே முதல்வர் ஆகிவிடுவாயா நீ?- விஜய்யை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
என்ன மாதிரி அரசியல் பேசுவியா நீ?நேரா CM சீட் கேக்குதா? என தவெக தலைவர் விஜய்யை பிரகாஷ் ராஜ் கூறினார்.
பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆதரவாக கலை விழா நடைபெற்றது. திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், “ ஒரு சினிமாவில் டாக்டர் ஆகலாம், என்ஜினீயர் ஆகலாம், முதல்வர் கூட ஆகலாம். ஆனால், அரசியலில் அப்படி உடனே ஆகிவிட முடியுமா? என் அளவிற்கு அரசியல் நீங்கள் பேசியது உண்டா? நீங்கள் தமிழக மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ ஏதாவது பிரச்னை வந்தபோது, அவர்களுக்காக நின்றதுண்டா? உங்கள் மீது மக்கள் வைத்திருக்க அன்பு திறமைக்கானது. அரசியலுக்கு அல்ல. அந்த அன்பை நீங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறீர்கள். நடிகனை ரொம்ப பிடித்தால் விசில் அடிக்கலாம். நாட்டை கொடுக்கக் கூடாது. அரசியல் வேறு. சினிமா வேறு! திராவிட மாடல் வேண்டுமா? அடிமை மாடல் வேண்டுமா? சினிமா மாடல் வேண்டுமா?... என்ன மாதிரி அரசியல் பேசுவியா நீ?நேரா CM சீட் கேக்குதா? அரசியல்ல அப்படியே முதல்வர் ஆகிவிடுவாயா நீ?” எனக் கேள்வி எழுப்பினார்.


