பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஜூன் 6ம் தேதி வரை போலீஸ் காவல்

 
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஜூன் 6ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

f


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா  பாலியல் புகாரில் சிக்கினார். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அத்துடன்  சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைதானார்.

Image


இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஜூன் 6ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 7 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவை ஜூன் 6ம் தேதி வரை சிறப்பு விசாரணை குழு தனது வசம் வைத்து விசாரிக்க உள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவின் போது காவலில் இருப்பார். இந்த சூழலில் புதிய ஜாமின் மனு தாக்கல் செய்ய பிரஜ்வால் ரேவண்ணா தரப்பு முடிவு செய்துள்ளது.