முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பிரக்ஞானந்தா, சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ஃபிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நாரே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார். நாக் அவுட் உலகக்கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல்முறையாகும். இளம்வீரரான பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற வெள்ளி பதக்கத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை
ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் @rpragchess அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக (1/2) pic.twitter.com/w7ut9wzdNX
— TN DIPR (@TNDIPRNEWS) August 30, 2023
அப்போது அவரை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.