12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம்!!

 
tn

 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

tn

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.23ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது.பொது தேர்வு எழுத உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.  தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

t

அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும்  பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையால்  உத்தரப்பட்டுள்ளது.  ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்கள் வரை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.  தேர்வில் ஏதேனும் புகார் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் பொது தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு செயல்பாடுகள் தேர்வு துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.