10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் நிறைவு!!!

 
tn

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில்  10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. அதன்படி  12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.  அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

10-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே   10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு (கடந்த 25ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. 

schools open

இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அத்துடன் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.