10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம்!!

 
tn

தமிழகத்தில் கொரோனா பரவல்  குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடப்பாண்டு நடத்தப்படவுள்ளது. அதன்படி  12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,  11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  அதேபோல் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது.

schools open

அத்துடன் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு (ஏப்ரல் 25) இன்று முதல் மே 2ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுடன், செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

tn

இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகிறது.தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் செய்முறை தேர்வு இன்று தொடங்கி வருகிற மே 2-ந் தேதி வரை நடக்கிறது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 3 நேரம் நடைபெற்று வந்த செய்முறை, தேர்வு இனி 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.