சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் - பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி

 
vijay

தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயார் என காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 28ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். வருகிற 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக-தவெக இடையிலேதான் போட்டி என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயார் என காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அறிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி விஜய் டயலாக் பேசுகிறார். ஆனால் களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். வருகிற தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார். மற்ற கட்சிகள் அழைத்தால் போட்டியிட தயாராக உள்ளேன். திமுக தன்னை அழைத்தால் இணைய தயாராக இருக்கிறேன் என கூறினார்.