ரூ.5 கோடி மோசடி புகார் - பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
Updated: Jul 30, 2025, 16:24 IST1753872877329
தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.1,000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி டெல்லி தொழிலதிபரிடம் ரூ. 5 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில், தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின்பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னையிலும் இவர் மீது ஆறு பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் தேவிபட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டு கடனையும், வாங்கிய பணத்தையும் தராததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.


