“விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்; விஜய் ரசிகர்களால் எனக்கு ஆபத்து” - பவர் ஸ்டார்

எந்த கட்சி அழைத்தாலும் சென்று ஜோசப் விஜயை எதிர்த்து நிற்பேன் என நடிகர் பவர் ஸ்டார் கூறியுள்ளார்.
நடன இயக்குனர் ராபர்ட் நடிக்க உள்ள பர்பியூம் திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சி சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் பவர் ஸ்டார்,சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பவர் ஸ்டார், “முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள், அவர் மேடையில் பேசுவதெல்லாம் பஞ்ச் டயலாக்ஸ் வசனங்கள். எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், எனக்கும் அவரை போல் கூட்டம் கூடும்.
விஜய் எங்கு நின்னாலும் அவரை எதிர்த்து நிற்பேன், எந்த கட்சி அழைத்தாலும் சென்று ஜோசப் விஜயை எதிர்த்து நிற்பேன். இப்போது நான் பேசியதால் விஜயின் ரசிகர்களால் எனக்கு ஆபத்தும் அச்சுறுத்தலும் இருக்கலாம், அதனால் முதல்வர் தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்களை சந்தித்து பிரச்சாரத்திற்கு செல்லும் போது பிரச்சாரம் செய்யுங்கள், வசனங்கள் பேசாதீர்கள்” என்றார்.