மின்கம்பத்தை தொட்ட சிறுவன் பலி!

 
Death

சங்கரன்கோவில் அருகே புதுசுப்புலாபுரம் கிராமத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் மின் கம்பத்தை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

death

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புது சுற்றுலாப்புரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் ஏழாம் வகுப்பு மாணவன் அபிலேஷ்(12). நேற்று இரவு ஏழு மணிக்கு விளையாடிவிட்டு யதார்த்தமாக வீட்டு அருகே இருக்கும் மின்கம்பத்தை பிடித்துள்ளான், அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அப்பிலேஷ் கீழே மயங்கி விழுந்துள்ளான்.  அந்த வழியே சென்றவர்கள் அபிலேஷை மீட்டு அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அபினேஷ் எந்தவித துடிப்பும் இல்லாததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபிலேஷை சோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததினர். அபிலேஷன் உடலை உடற்கூறு ஆய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சுப்புலபுரம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.