மின்தடையா?- இனி வாட்ஸ் ஆப்பிலும் புகார் அளிக்கலாம்!

 
ச்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், ஆங்காங்கே மின் தடை நிலவுகிறது. இதனால் தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் மின்சார சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மின்சார வாரியத்தின் புதிய வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 94987 94987 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு “Hi" என அனுப்பி மின்தடை உள்ளிட்ட புகார்களைப் பதிவு செய்யலாம். புகார்கள் தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில், புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.