தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
Sep 12, 2023, 08:34 IST1694487859984

செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 30 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இத்தேர்வு தேதி மாற்றம் குறித்து மாணவர்கள் அனைவரும் அறியும் வகையில் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடன் தெரிவித்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இயக்குனர் சேதுராம வர்மன் கேட்டு கொண்டுள்ளார்.