டாப்லெஸ் போஸில் வீடியோ போட்டது வீணா போகல...! 50 லட்சம் வரி கட்டும் இன்ஸ்டா பிரபலம்!

 
1

கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் (Content Creator) அஸ்வனி, இணையத்தில் 'பர்பிள் ஹால்சியான்' (Purple Halcyon) என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறார். இவர் இன்ஸ்டாகிராம் கட்டணச் சந்தாக்கள் (Paid Subscriptions) மூலமாக மட்டுமே மாதம் சுமார் ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

தற்போது சமூக வலைதளங்களில் 'கிரியேட்டர் எக்கானமி' (Creator Economy) எனப்படும் டிஜிட்டல் உள்ளடக்க வருவாய் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இவரது வருமானம் தொடர்பான இந்தத் தகவல்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இருப்பினும், இந்த வருவாய் விவரங்கள் தொடர்பாக முக்கியத் தெளிவுபடுத்தலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதம் ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைப்பதாகக் கூறப்படும் இந்தக் கணக்குகள், அஸ்வனி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த தகவல்கள் மற்றும் இணையத்தில் வைரலாகும் சந்தாதாரர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட கணிப்புகளே தவிர, சுயாதீனமான நிதித் தணிக்கையோ அல்லது வருமான வரித் துறை சார்ந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலோ இதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருவியில் வெள்ளை சேலை அணிந்துக் குளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தனது பக்கம் ஈர்த்த அஸ்வனி கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக டாப்லெஸ் வீடியோவை போட்டதன் விளைவு தான் தற்போது அதிரடியாக 23 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து மாதம் 90 லட்சம் வருமானத்தை நெருங்கி விட்டார் என்கின்றனர். ஆடை அணியாமல் ஒட்டுமொத்த முதுகு அழகையும் காட்டி அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமிலேயே இப்படி காட்டுகிறாரே சப்ஸ்கிரைப் செய்தால் மொத்தமாக பார்த்து விடலாம் என பலரும் 390 ரூபாய் சந்தா கட்டி ஹாட் கன்டென்ட்களை பார்த்து வருகின்றனர்.

சுமார் 50 லட்சம் ரூபாய் வரியாகவே தான் செலுத்தி வருவதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியிலும் அஸ்வனி கூறியுள்ளார். இந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் இவர் சம்பாதிப்பதை பார்த்து பல இளம் பெண்களும், நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்து ஆடைகளை குறைக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற இன்ஃப்ளூயன்சர்களுக்கு எந்தவொரு தடையும் கிடையாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கூடிய சீக்கிரமே 25 ஆயிரத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பிடித்து 1 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்க முடிவெடுத்துள்ளாராம்.