“அன்பு அக்கா த்ரிஷாவை யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது”- த்ரிஷா நற்பணி மன்றத்தினர் போஸ்டர்
அரசியல் மேடைகளில் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசிப் பெண்களை அவமதிப்பதாகக் கூறி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்டம் த்ரிஷா நற்பணி மன்றத்தின் (தலைமையகம்) சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் மதுரை நகரையே கலக்கிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் மேடைகளில் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசிப் பெண்களை அவமதிப்பதாகக் கூறி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்டம் த்ரிஷா நற்பணி மன்றத்தின் (தலைமையகம்) சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் மதுரை நகரையே கலக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த பேனரில் "பெண்களின் பெயரைப் பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசி அவமதித்தால் ஏற்க முடியாது; எங்கள் அன்பு அக்கா த்ரிஷா அவர்களைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது, மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்" என்று 'பெண்கள் நம் நாட்டின் கண்கள்' என்ற முழக்கத்தோடு அந்த போஸ்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்ன இப்படி இறங்கிட்டாங்க - மோதிக்கொள்ளும் உதயநிதி Vs த்ரிஷா ஆதரவாளர்கள்! #Trisha #DMK #UdhayanidhiStalin #Controversy #Supports #Poster #Clash #Viral #TamilNews #SpecialStory #ZeeTamilNews pic.twitter.com/VVvbpv8qsr
— Zee Tamil News (@ZeeTamilNews) August 5, 2026
தமிழ்நாட்டில் எவ்வளவோ அரசியல் விவாதங்களும் மக்கள் பிரச்சினைகளும் வரிசைகட்டி நிற்கும்போது, தங்களின் 'த்ரிஷா அக்காவுக்காக' மதுரை மன்றத்து ரசிகர்கள் திடீரென பொங்கி எழுந்து போஸ்டர் யுத்தத்தில் இறங்கியிருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள், "மதுரைக்காரங்க மாஸ் தான் போங்க... ஆனா இந்த 'தலைமையகம்' ஆபீஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்!" என்று நக்கலாகக் கிண்டலடித்துச் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

