"அதிமுக கூட்டணி வேண்டாம்” - அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

அதிமுக கூட்டணி வேண்டாம் என பாஜகவினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகள் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கப்படுவார் என்ற பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் எனவும், அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும் பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் வெட்டப்பட்டுள்ளது. பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.