"தமிழகத்தின் எதிர்காலமே... எங்கள் அம்மா”- அதிமுகவினரையே அலர விட்ட போஸ்டர்

 
ச்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் தற்போது ஒட்டப்பட்டுள்ள ஒரு அரசியல் வாழ்த்து போஸ்டர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழின் பெருமையைப் பாடும் கவிதை வரிகளுடன் தொடங்கும் அந்த போஸ்டரில், மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். குறிப்பாக ​"வறுமையை ஒழிக்க வந்த தாயே! மக்கள் வெள்ளமே! புதிய விடி வெள்ளியே! ஏழைகளின் தலைவியே!!" என்று உருகியதோடு மட்டுமில்லாமல், "தமிழகத்தின் எதிர்காலமே!! எங்கள் அம்மா மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களை வாழ்த்துகின்றோம்..." என்ற அதிரடியான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் சீர்காழியின் முக்கிய வீதிகள், மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் என நகரம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள், அவ்வழியே செல்லும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுத்துள்ளது. ​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி புருஷோத்தமன் என்பவரால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சீர்காழி பகுதியில் திடீரென மார்ட்டின் லீமா ரோஸை "தமிழகத்தின் எதிர்காலமே" என்று அரசியல் முகம் கொடுத்து முன்னிறுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், உள்ளூர் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது 'ஹாட் டாபிக்காக' மாறியுள்ளது