“WHAT BRO IT'S VERY WRONG BRO”- விஜய்க்கு எதிராக ஈரோட்டில் வெடித்த போஸ்டர் சர்ச்சை
ஈரோடு மாவட்டம், பெருந்துரை அருகே விஜயமங்கலத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பெருந்துறை பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பெருந்துரை பகுதி முழுவதும் விஜயை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா என்றும், இங்கு இருக்க கரூருக்கு போகல ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? WHAT BRO IT'S VERY WRONG BRO என்றும், விஜய் பரிதாபங்கள் PRESENT மற்றும் ABSENT என பிரித்து
PRESENT பக்கத்தில்
* ஜனநாயகன் Dubbing
* Audio lanch க்கு மலேசியா செல்வது
* ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனவும்
ABSENT பக்கத்தில்
* மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது
* மக்களை சந்திக்க கரூர் செல்வது
* தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது
என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


