தபால் வாக்குகளை ஸ்கேன் செய்ய வேண்டும்! - தவெக நிர்மல்குமார் கோரிக்கை..!

 
1

தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, மனு அளித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி:

ஓட்டு எண்ணிக்கையில், தில்லுமுல்லுகளை செய்து, குளறுபடிகளை ஏற்படுத்த, திமுக முயற்சி செய்து வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு செய்துத்தர வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த தபால் வாக்குகள் முறையாக எண்ணப்பட வேண்டும். அனைத்து தபால் வாக்குகளும் ஸ்கேனிங் செய்யப்பட்டு தபால் வாக்குகளின் ரெக்கார்டுகளை பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக காட்சி பதிவு செய்து எங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் திமுகவினர் தகராறுகளை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் வாக்கு என்னும் மையங்களில் மத்திய காவல் படையினர் மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக ஸ்கேன் செய்து, அவை முழுவதுமாக எண்ணப்பட்ட பிறகே கடைசி இரண்டு சுற்று மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை நிறைவடைய வேண்டும். இதுகுறித்து அனைத்து ஆர்.ஓ. அதிகாரிகளுக்கும் சர்குலர் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.