#BREAKING தபால் வாக்கு - 5 துறைகள் கூடுதலாக சேர்ப்பு!

 
s

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்கு செலுத்துவம் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதன்படி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரக்கு கப்பலில் பணியாற்றுபவர்கள், பிஎஸ்என்எல், சென்னை மெட்ரோ ரயில், தகவல் ஒளிபரப்பு துறை, உணவு பாதுகாப்பு கழகம், ஊடக துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தாண்டு கூடுதலாக 6 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், அரசு மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள், தமிழகத்தில் பணியில் உள்ள தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.