அயோத்தி ராமர் கோவில் - அஞ்சலகங்களுக்கு நாளை மதியம் 2.30 வரை விடுமுறை

 
office

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை கோவையில் உள்ள அஞ்சலகங்களுக்கு நாளை மதியம் 2.30 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை தலைமை அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு: நாளை தபால் நிலையம் அரை நாள் விடுமுறை

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டையை நாளை வெகு விமர்சயாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவில் பிரதிஷ்ட்டையை முன்னிட்டை நாளை ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிப்மர் மருத்துவமனையும் நாளை 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்ட்டையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சலகங்கள் மதியம் 2.30 விடுதுறை அளிக்கப்படுவதாக, கூட்செட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. மதியம் 2.30 க்கு மேல் அஞ்சல் மற்றும் அஞ்சல் துறை வங்கி பணிகள் வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.