“மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி”- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

சென்னை கொளத்தூரில் ரூ.210 கோடி மதிப்பிலான 6 தளங்களோடு நவீன உபகரணங்களோடு பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Image

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வடசென்னையை வளர்ந்த சென்னையாக்க நாம் எடுத்து வரும் முயற்சிகளில் பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல் கல். பெரியார் பெயரிலான மருத்துவமனையை திறந்து வைத்ததால் பெரியார் தொண்டனாக பெரும் மகிழ்ச்சி. வடசென்னை மக்களின் உயிர் காக்கும் மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை இருக்கும். எனது பிறந்தநாள் வரும்போது மக்களுக்கு நெருக்கமான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவது வழக்கம். அவ்வகையில், நடப்பாண்டில் கட்டியெழுப்பிய திட்டம் தான், பெரியார் உயர் சிறப்பு அரசு மருத்துவமனை.

Image

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். அனைத்து அதிகாரமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்ற திராவிட மாடல் அரசில் மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். சுய ஒழுக்கம் அனைவருக்கும் முக்கியம், பொது இடங்களில் தூய்மையை பேணி காக்க வேண்டும். நம் மாணவர்களின் கல்விக்காக செய்யும் திட்டங்களை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்களான உங்களை நம்பி மருத்துவம் பார்க்க வரும் மக்களை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்க வேண்டும். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி. முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம். தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே வடமாநில பயணிகள் அறிந்துகொள்ளட்டும்” என்றார்.