புனே போர்ஷ் விபத்து: காரை ஓட்டி கொன்ற சிறுவன்.. ஜாமீனில் வந்த தந்தை பணமாலையுடன் குத்தாட்டம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

 
1

புனே போர்ஷ் கார் விபத்து வழக்கில் இரண்டு இளம் உயிர்கள் பலியான நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 

கடந்த 2024-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன், நள்ளிரவில் மதுபோதையில் அதிவேகமாக போர்ஷ் காரை ஓட்டிச் சென்று பைக் மீது மோதியதில் இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மைனர் என்பதால், சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற வினோதமான நிபந்தனையுடன் சிறார் நீதி வாரியம் மிக எளிதாக ஜாமீன் வழங்கியது. 

சிறுவன் மைனர் என்பதால் சிறார் நீதி வாரியம், சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதுவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேவேளையில், சிறுவன் மது அருந்தியதற்கான சோதனையில், மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கி அவரின் தாயாரின் ரத்த மாதிரியை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.அதில் சிறுவனின் தாய், தந்தை இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதி சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கழுத்தில் பணமாலையுடன் தனது மகன் மற்றும் மனைவியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னொருபக்கம் அந்த வீடியோ 2023-ல் நடந்தது என்றும் சிறுவன் குடும்பத்தினர் மழுப்பி வருகின்றனர்.