3வது கணவரை பிரிந்த பிரபல நடிகை..!

 
1

நடிகை மீரா வாசுதேவனை, ‘அடங்க மறு’ படத்தில் ரவி மோகனுக்கு அண்ணி கதாப்பாத்திரத்தில் பார்த்திருப்போம். இந்த படத்தில் கண்களாலேயே எக்ஸ்பிரஷன் கொடுத்து நன்றாக நடித்திருப்பார். இந்த படம் மட்டுமல்ல, மீரா வாசுதேவன் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமன்றி, சீரியல்களிலும் முக்கிய ரோல்களில் வந்துள்ளார்.

நடிகை மீரா வாசுதேவன், கடந்த 2005-ம் ஆண்டுபிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார்.2024 ஏப்ரல் மாதத்தில்தான் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மீரா திருமணம் செய்துகொண்டார்.

 இந்த நிலையில், தனது கணவர் விபினை நடிகை மீரா வாசுதேவனை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், மீரா வாசுதேவன் “2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.