'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் பங்கேற்ற பிரபல நடிகரின் மனைவி..! பெருகும் ஆதரவு..!

 
1

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற உள்ளது.
இந்நிலையில் தன் சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வி பங்கேற்றார். அதோடு அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.


இதுபற்றி நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில்,'' 'வி தி லீடர்ஸ்' இந்த மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை முடிக்கப்போவதாக கூறியுள்ளனர். இந்த திட்டத்துக்கு எனது கணவரின் பெயரை வைத்துள்ளனர். இதற்காக தான் நான் இன்று இங்கே வந்தேன்'' என்றார்.''நான் இங்கு வந்தது அவரது புனிதமான இந்த பயணத்திற்கு (மரக்கன்று நடவு) வாழ்த்து தெரிவிக்க தான் இங்கு வந்தேன். என் கணவரை நினைவு கூர்ந்து சகோதரர் அண்ணாமலை மரக்கன்று நடுவதும், அதற்கு அவரது பெயரை வைத்திருப்பதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். 'கிரீன் கலாம்' அமைப்பு வந்து வி தி லீடர்ஸ் உடன் சேர்ந்து மரக்கன்று நடுவதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். '' என்றார்.

'கிரீன் கலாம்' (Green Kalam) என்பது முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசனையின்படி, மறைந்த நடிகர் விவேக்கால் தொடங்கப்பட்ட மரம் நடும் இயக்கமாகும். விவேக் மறைவுக்கு பிறகு அதனை அவரது மனைவி அருள் செல்வி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தனா் 'கிரீன் கலாம்' மரக்கன்று நடும் விஷயத்தில் அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.