அடுத்த ஆண்டில் இருந்து பூந்தமல்லி- போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூன் பேட்டியளித்துள்ளார்.
கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதைய்டுத்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அடுத்த ஆண்டில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து பூந்தமல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
அப்போது பேசிய அவர், “ஆளில்லாத ரயில் இயக்குவது எப்படி ரயில் வரும் நேரம் எப்போது மற்றும் இங்கு நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் சோதனை ஓட்டம் செல்லும். 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற வழித்தட திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும். பூந்தமல்லி பனிமனையில் 75 சதவீத முடிந்து விட்டது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பணிகள் முடிந்து விடும். மெட்ரோ ரயில் பணிக்காக நிலம் எடுப்பது 99 சதவீதம் முடிந்து விட்டது. கிளாம்பரத்திற்கு விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை இடையில் 25 மீட்டர் இடைவெளியில் இடம் உள்ளது அந்த வழியில் எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார்.