ஜெ.வை ஏமாற்றி சொத்து சேர்த்தவர்! எம்ஜிஆரின் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மா விடாது- பொன்னையன்

 
ஜெ.வை ஏமாற்றி சொத்து சேர்த்தவர்! எம்ஜிஆரின் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மா விடாது- பொன்னையன் 

திமுகவின் கூட்டணி கட்சிகள் எல்லாம் லீசுக்கு சென்றுள்ளது, 6 அல்லது 11 மாத லீஸ் முடிந்ததும் ஓனரிடம் வந்துவிடும் என  முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், “கோடிகளை வாங்குவது திமுகவின் வழக்கம்.. தவெகவும் அதை பின்பற்றுவதில் ஆச்சரியமில்லை. திமுகவின் கூட்டணி கட்சிகள் எல்லாம் லீசுக்கு சென்றுள்ளது. 6 அல்லது 11 மாத லீஸ் முடிந்ததும் ஓனரிடம் வந்துவிடும். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ஏமாற்றி சொத்து சேர்த்தவர்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவரது நம்பிக்கையைப் பெற்றிருந்த வேலுமணி, அந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி சொத்துகளைச் சேர்த்தார். எம்.ஜி.ஆரின் ஆவி அவரை சும்மாவே விடாது. அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கும், ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்களுக்கும் மாறாக சிலர் செயல்பட்டனர்.” என்றார்.