பெண்கள் உயர்கல்வி படிப்பது 47% அதிகரிப்பு; இதுவே புதுமைப் பெண் திட்டத்தின் வெற்றி- பொன்முடி

 
பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் புகாருக்கு அமைச்சர் பொன்முடி மறுப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது உயர் கல்வித்துறையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.." "கையெழுத்து நான் போட்டேன்.." பொன்முடி VS  எடப்பாடி! அனல்பறந்த வாதம் | Heated debate in assembly who brought about the  7.5 per cent ...

புதிய அறிவிப்புகள்

🔷 அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

🔷 கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

🔷 ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

🔷 மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.

🔷 அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

🔷 கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

Disqualified TN minister Ponmudy reinstated as MLA after SC suspends his  conviction and sentence in DA case | India News - The Indian Express

🔷 திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

🔷 காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

🔷 GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

🔷 அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்

🔷 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் ₹7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்

🔷 தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்

🔷 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பதிலுரையில், 

பெண்கள் எல்லாம் படிக்க முதலமைச்சர் கொண்டுவந்த திட்டம் புதுமைப்பெண் திட்டம் 

 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் உயர் கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தவர் தமிழக முதலமைச்சர்..

 இந்த ஆண்டு தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டத்தையும் கொண்டு வந்தவர் தமிழக முதலமைச்சர்.

அனைவரும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவர் தமிழக முதலமைச்சர்.

பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கடந்த ஆண்டு மட்டும் 28,601 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் 

 சென்னை மாநில கல்லூரியில் 47 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிப்பது அதிகரித்து உள்ளது.  இதுதான் புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றி 

புதுமைப்பெண் திட்டத்தில் 2021-22-43,619 பேர், 2022-23-54,004 பேர், 2023-2024-63,027  என்று மொத்தம் மூன்று ஆண்டுகளில் 2.73லட்சம் மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும். தனியார் கல்லூரியில் 10% மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% சேர்க்கை அதிகரிக்கப்படும். என்றார்.