"எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க” - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பொன்முடி
எனது முந்தைய பேச்சால் மனங்கள் புண்பட்டிருந்தால் உளமார்ந்த மன்னிப்பு கேட்கிறேன் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதி மன்றத்தில் கடந்த ஆக. 6-ம் தேதி விசாரணைக்கு வந் தது. அப்போது பொன்முடி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து. ஆக. 7-ம் தேதி நீதி மன்றத்தில் பொன் முடி ஆஜரானார். அதன்பிறகு, பிடி வாரண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டு வழக்கு 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, “நான் பேசியது தவறாக இருந்தால், அனைவரும் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டேன். எனது பேச்சால் புண்பட்ட அனைவரிடமும் உளமாற மன்னிப்பு கேட்கிறேன். வழக்கு தொடர்ந்த சகோதரியிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரியிருந்தேன். உளமாற வருத்தத்தையும், மன்னிப்பையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோல் நிச்சயமாக பேசுவதற்கு வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்.” என்றார்.

