பொங்கல், உப்புமா, கிச்சடி, .. அரசு பள்ளிகளில் அசத்தலான காலை சிற்றுண்டி..எத்தனை வகைகள் தெரியுமா?

 
1

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, காலை உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடையவுள்ளனர்.

காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் விரிவாக்கத்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றிருந்ததால், திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு ஒரே வகையான உணவு தொடர்ந்து வழங்கப்படாமல், வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவு வகைகள் வழங்கும் வகையில் உணவுப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

திங்கட்கிழமை - உப்புமா,

செவ்வாய்க்கிழமை - கிச்சடி,

புதன்கிழமை - பொங்கல்,

வியாழக்கிழமை - உப்புமா,

வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு

என உணவுப்பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு உயர்தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசு தீவிரக் கவனம் செலுத்துகிறது. உணவைத் தயாரிக்கும் சமையற்கூடங்கள் மற்றும் மாணவர்களுக்கு உணவை உபசரிக்கும் இடங்கள் அனைத்தும் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவின் தரத்தை வழக்கமாகக் கண்காணிக்கவும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்குத் தொடர் கண்காணிப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.