பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

 
train

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரயில்களில் இன்று முன்பதிவு தொடங்குகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொங்கல் பண்டிக்கைக்காக ஜனவரி 12ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

train

 ஜனவரி 13ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 16ஆம் தேதியும் ,  ஜனவரி 14ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 17ஆம் தேதியும்,  ஜனவரி 15ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  அதேபோல் ஜனவரி 17ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

tn

பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முன்கூட்டியே  முன் பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.  விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. நேற்று டிக்கெட் முன்பதிவு  தொடங்கிய சில  நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.