பொங்கல் ஸ்பெஷல்: 34,087 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு! எந்தப் பேருந்து எங்கிருந்து கிளம்பும்..?
“பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக வரும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும் அவர், “ஜனவரி 9 முதல் ஜனவரி 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 34,087 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 9-ல் 1050, ஜனவரி 10-ல் 1,030, ஜனவரி 11-ல் 255, ஜனவரி 12-ல் 2,200, ஜனவரி 13-ல் 2,790, ஜனவரி 14-ல் 2,920 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் முடிந்து ஊர் திரும்ப ஜனவரி 16 முதல் 19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
எங்கிருந்து எங்கு?
கிளாம்பாக்கம் : புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், செங்கோட்டை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சவூர் மார்கமாக செல்லும் பேருந்துகள்.
கிளாம்பாக்கம் மாநகர பேருந்து முனையம்: வந்தவாசி, திருவண்ணாமலை மார்கமாக செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு :காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மற்றும் ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள்
மாதவரம் : பொன்னேரி மற்றும் ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு மையங்கள்
கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 1 என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
புக்கிங் மற்றும் புகார் எண்
www.tnstc.in, TNSTC ஆப் மற்றும் 94440 18898 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் முன்பதிவு செய்யலாம்.
புகார்களுக்கு
94450 14436 (கட்டுப்பாட்டு அறை) மற்றும் ஆம்னி பேருந்து புகார்களுக்கு 1800 425 6151 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இணைப்பு பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் 10 ஏடிஎம் வசதிகள், 5 ஆம்புலன்ஸ், மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்.
வயது முதிர்ந்தோருக்காக 10 மின்சார வாகனங்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்.
சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நெரிசலின்றி செல்ல தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்
பொதுமக்கள் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தலாம்” என்று கேட்டுக்கொண்டார்.


