பொங்கல் விடுமுறை- கிளாம்பாக்கம் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை போக்குவரத்து நெரிசல்

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் செல்வதால் கிளாம்பாக்கம் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை, புதன்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் கன்னிப்பொங்கல் என தொடர்ந்து செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுக்கும் ஸிவிடுமுறை அரசு தரப்பில் அறகவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழர் பண்டிகையான பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சொந்த ஊர்களுக்கு சென்று தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கார் வேன் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்,இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
அதன் காரணமாக கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோயில் பகுதிவரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் முதல் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.