பொங்கல் பண்டிகை : ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..

 
train

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (12-ந்தேதி) தொடங்குகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை  மற்றும் காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.  இதில், பெரும்பாலானோர் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட் களுக்கு முன்பே தொடங்கும். அந்தவகையில் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி தொடங்குகிறது. 

pongal

அடுத்த ஆண்டு(2025)  ஜனவரி 13- ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க் கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16- ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் இன்று முதல் தொடங்குகிறது.  

ரயில் சேவை

அந்த வகையில், ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.