பொங்கல் பண்டிகை - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!!

 
modi

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

pongal

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில், அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.